ஈஸி வெனிலா கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் சீனி - முக்கால் கப் எண்ணெய் - அரை கப் பால் - அரை கப் வினிகர் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று வெனிலா பவுடர் (அ) வெண்ணிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மைதா

பேக்கிங் பவுடர்

பேக்கிங் சோடா

வெனிலா பவுடர் ஆகியவற்றை இரண்டு அல்லது மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.

பாலில் வினிகர் ஊற்றி பாலைத் திரிய விடவும்.

முட்டையுடன் சீனி

திரிந்த பால்

எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சீனி முழுவதும் கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் இந்த கலவையில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

கேக் உப்பி வர வசதியாக இருக்குமளவு சற்று குழியான ஒரு பாத்திரத்தில் நெய் தடவி கலவையை அதில் ஊற்றவும்.

குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடத்திற்கு சூடு செய்து அதில் சமையல் சோடாவை பரவலாக தூவவும்.

குக்கர் தட்டை குக்கரில் வைத்து அதன் மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து கேஸ் கட் மற்றும் வெயிட் போடாமல் குக்கரை மூடி தீயை குறைத்து அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும்.

ஒரு டூத் பிக் (அ) கத்தியால் குத்தி கேக் வெந்து விட்டதா என்று பார்க்கவும். கேக் ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து விடவும். இல்லையேல் மேலும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு அடுப்பில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான ஈஸி வெனிலா கேக் தயார். விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: