இனிப்பு பிஸ்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - கால் கிலோ

நெய் - கால் கிலோ

சீனி - அரை கிலோ

அரிசிமாவு - 4 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி

செய்முறை:

கால் கிலோ மைதா மாவில் நெய், தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போன்று பிசையவும்.

ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும், கால் கிலோ சீனியைப் போட்டு இளம் பாகு காய்ச்சி இறக்கவும்.

4 தேக்கரண்டி அரிசிமாவில், ஒரு தேக்கரண்டி நெய்யைக் கலந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை, உருண்டைகளாக செய்து ஒவ்வொரு உருண்டையையும் பூரிப்பலகை மீது வைத்து, வட்டங்களாகத் தேய்த்துக் கொண்டு அதன் மீதுநெய் கலந்து வைத்துள்ள அரிசி மாவைத் தடவவும்.

ஒவ்வொரு வட்டத்தையும் பாய் சுருட்டுவது போல சுருட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கால் கிலோ நெய்யைக் காய வைத்துச் சுருட்டி வைத்துள்ள மைதா மாவைப் போட்டு பொரித்து எடுத்து, சீனிப்பாகில் ஊறவிடவும்.

10 நிமிடங்கள் ஊறியதும், ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். மறுபடியும், ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கால் கிலோ சீனியைப் போட்டு முதிர்பாகாக காய்ச்சி இறக்கவும்.

மைதா பிஸ்கட்டுகளை, மறுபடியும் இந்த முதிர்பாகில் 5 நிமிடங்கள் ஊற வைத்து, தட்டில் பரவலாக வைக்கவும்.

மீதமுள்ள பாகை பிஸ்கட்கள் மீது பரவலாக ஊற்றவும். ஆறிய பின் சீனிப்பாகு, பிஸ்கட்கள் மீது மென்மையாக படிந்திருக்கும்.

இதன்மீது தேங்காய் துருவலைத் தூவி அலங்கரிக்கலாம்.

குறிப்புகள்: