ஃபிரிட்ஜ் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

Niceபிஸ்கெட் - 2 பாக்கெட்

லைட்டான காபி டிக்காஷன் - 1/2 கப்

உப்பு கலக்காத வெண்ணெய் - 200 கிராம்

ஐசிங் சுகர் - 250 கிராம்

கோக்கோ பௌடர் - 4 ஸ்பூன்

செய்முறை:

வெண்ணெயை நன்கு அடித்துக் கொள்ளவும்

அதில் கோக்கோ பௌடர்,ஐசிங்சுகர் சேர்த்து க்ரீம் பதத்தில் அடித்துக் கொள்ளவும்

பிஸ்கெட்டுகளை இளம் சூடான டிக்காஷனில் முக்கி உடனே எடுத்து ஒரு சதுரமான ட்ரேயில் அடுக்கவும்

மூன்று,மூன்று பிஸ்கெட்டுகளாக மூன்று வரிசையாக ஒன்பது பிஸ்கெட்டுகளை செவ்வகமாக அடுக்கவும்

அதன் மேல் ஒரு லேயர் க்ரீமை தடவவும்

மீண்டும் பிஸ்கெட்டுகளை டிக்காஷ்னில் முக்கி அடுக்கவும்

மீண்டும் க்ரீமை தடவவும்

இதே போல் பிஸ்கெட்டுகளை ஐந்து அடுக்குகளாக அடுக்கவும்

மீதியுள்ள க்ரீமை பிஸ்கெட் அடுக்கை சுற்றியும்,மேலேயும் பூசவும்

இதைஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்

பின் எடுத்து கத்தியால் வெட்டி பறிமாறவும்

குறிப்புகள்:

க்ரீமை பட்டையான கத்தியால் பூசவும்

ஒவ்வொரு முறையும் வெந்நீரில் முக்கி எடுத்தால் சுலபமாக பூச முடியும்

டிக்காஷன் இல்லையென்றால் இன்ஸ்டன்ட் காபிதூளை வென்னீரில் கலந்து பயன்படுத்தலாம்