வெஜ் பிரியாணி (2)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி - 4 டம்ளர்

தேங்காய் பால் + நீர் - 4 டம்ளர் + 4 டம்ளர்

காளிப்ளவர் - 50 கிராம்

கேரட், பட்டாணி, பீன்ஸ், பீட்ரூட், குடைமிளகாய் - ஒவ்வொன்றும் 25 கிராம்

வெங்காயம் - 3

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்

கொத்தமல்லி,புதினா - அரை கப் (இரண்டும் சேர்த்து)

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

கேசரி பவுடர் - சிறிதளவு

தயிர் - 1/2 கப்

எலுமிச்சை - 2

முந்திரி - 10

கிஸ்மிஸ் - 4

ஏலக்காய் - 3

பட்டை - 1

கிராம்பு - 3

அன்னாசி பூ - 2

பிரிஞ்சி - 1

நெய் - 50 கிராம்

ரீபைண்ட் ஆயில் - 2 மேசை கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி, அன்னாசி போடவும்.

பின்னர் முந்திரி,கிஸ்மிஸ், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம்,உப்பு சேர்ந்து வதக்கி புதினா,கொத்தமல்லி சேர்க்கவும்.

அதில் இஞ்சி,பூடு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.

பின்னர் எல்லா காய்கறிகளையும் சேர்த்து கிளறி மிளகாய் தூள் சேர்க்கவும்.

மசாலா ஒட்டிய பின் தயிர் சேர்த்து கால் பாகம் வேகும் வரை வதக்கவும்.

பின்னர் தேங்காய் பால், நீர், கேசரி பவுடர் சேர்த்து அரை பதம் வெந்ததும் அரிசியை சேர்க்கவும்.

கொதித்து நீர் வற்றுவதற்கு முன்பே தம்மில் 15 நிமிடங்கள் போடவும்.

பின்னர் இறக்கி வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி அத்துடன் எலுமிச்சை சாற்றை விதை இல்லாமல் பிழிந்து எல்லா இடத்திலும் படும்படி கரண்டியால் கிளறி பின் பரிமாறலாம்.

குறிப்புகள்: