மைக்ரோஅவன் மஷ்ரூம் பிரியாணி

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மொட்டுக் காளான் (அ) பால் காளான் - 15

(விருப்பமான) அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

தயிர் - 1/2 கப்

பால் - 1/4 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

பிரிஞ்சி இலை - சிறிது

அன்னாசிப் பூ - 1

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - 1/4 கட்டு

புதினா தழை - 1/4 கட்டு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் 4 கப் தண்ணீர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, சிறிது உப்பு, சில துளிகள் எண்ணெய் விட்டு மைக்ரோ அவனின் பாத்திரத்தில் வைத்து முழு சூட்டில் 9 நிமிடங்களும், 75% சூட்டில் 6 நிமிடமும் வைத்து எடுக்கவும்.

எடுத்த சாதத்தை தட்டில் கொட்டி ஆற விடவும்.

காளான், வெங்காயம், கொத்தமல்லி தழை, புதினா தழை இவற்றை பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.

வேறொரு மைக்ரோ அவனின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, முழு சூட்டில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, திரும்பவும் 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.

பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி 1 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.

பிறகு தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். தயிர், கரம் மசாலா தூள், பாதி கொத்தமல்லி தழை, பாதி புதினா சேர்த்து கலக்கி 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.

நறுக்கி வைத்த காளான்களையும், உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி 4 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.

மைக்ரோ அவனின் பாத்திரத்தில் ஆற வைத்த சாதத்தை ஒரு லேயராக பரப்பவும். காளான் கிரேவியில் பாதியை அதன் மேல் பரவலாக வைக்கவும். மீண்டும் சாதத்தை அதன் மேல் பரப்பி, மீதியுள்ள கிரேவியை பரப்பி சாதத்தால் நன்கு மூடவும்.

அதன் மேல் மீதியுள்ள கொத்தமல்லி, புதினாவை தூவி, மூடி, அவனில் 75% சூட்டில் 8 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

எடுத்து சாதம் உடையாமல் நன்கு கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான மஷ்ரூம் பிரியாணி, சிரமமின்றி அவனில் தயார்.

குறிப்புகள்: