பீட்ரூட் பிரியாணி (2)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பொன்னி அரிசி -1கப்
பீட்ரூட் துறுவல் -1கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
இன்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
நெய் -2ஸ்பூன்
கொத்தமல்லிதழை -1கைப்பிடி
புதினா -1கைப்பிடி
பட்டை,கிராம்பு,ஏலக்காய் -தலா 1
செய்முறை:
அரிசியை 10நிமிடம் ஊறவைக்கவும்.
வெங்காயம்,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு போட்டு வதக்கி துறுவிய பீட்ரூட் சேர்க்கவும்.பீட்ரூட் பச்சை வாசனை போக வதங்கியவுடன்கொத்தமல்லி,புதினா,கரம் மசாலா உப்பு போட்டு வதக்கி ஊறவைத்த அரிசி போடவும்.11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்த்து எல்லாவற்றையும் நன்றாக கிளறிவிட்டு குக்கரை மூடி 2விசில் வந்ததும்5நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
சுவையான பீட்ரூட் பிரியாணி ரெடி.