பச்சை மொச்சை பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 4
பச்சை மொச்சை - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 8 பல்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
பட்டை - சிறு துண்டு
எண்ணெய், நெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்.
பச்சை மொச்சையை நன்கு ஊறவைத்து, தோல் நீக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை, பட்டை ஆகியவற்றை நைஸான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, மொச்சை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறி, 3 கப் நீர் ஊற்றி, கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கேரட் ராய்த்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.