நெல்லை தம் பிரியாணி (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் அல்லது சிக்கன் - ஒண்ணேகால் கிலோ

பிரியாணி அரிசி - 1 கிலோ.

எண்ணெய் - 150 மில்லி

நெய் - 150 மில்லி.

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்.(100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு அரைத்துக்கொள்ளவும்)

கரம் மசாலா - 1 டீஸ்பூன்( ஏலம், பட்டை, கிராம்பு கலவை)

பச்சை மிளகாய் - 6.

சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 300 கிராம்.

தக்காளி - 400 கிராம்

தயிர் - 200 மில்லி

எலுமிச்சை - சிறியது என்றால் 2.

புதினா - ஒரு கட்டு.

கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு.

ஆரஞ்சுரெட், லெமன் யெல்லொ கலர் - 2 பின்ச்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைக்கவும். பின்பு தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு, ஒரு டீஸ்பூன் சில்லி பவுடர், உப்பு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி நீளவாக்கில் மெல்லியதாக கட் பண்ணி வைக்கவும். கொத்தமல்லி, புதினா தழைகளை சுத்தம் செய்து சிறிதாக கட் பண்ணி வைக்கவும்.

பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில்,150 மில்லி எண்ணெய்,100 மில்லி நெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் முழுவதும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, கரம் மசாலா ஒரு டீஸ்பூன் சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். பின்பு பாதி கொத்தமல்லி, புதினா தழைகளை சேர்த்து வதக்கவும், தக்காளி சேர்க்கவும் உப்பு, சில்லி பவுடர் சேர்த்து சிம்மில் வைத்து மூடி போட்டு எண்ணெய் தெளிந்து தக்காளி குழைவானதும் மட்டன் கலவையை சேர்த்து மூடிவைத்து அரை மணி நேரம் வேக வைக்கவும்.

பின்பு மட்டன் பாதி வெந்திருக்கும், எலுமிச்சை பிழியவும். 10 நிமிடத்தில் கறி நன்கு வெந்து விடும்.மீதி இருக்கும் கொத்தமல்லி புதினா தழைகளை சேர்க்கவும். கறி மூழ்கும் அளவுக்கு கிரேவி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

அரிசியை முக்கால் வேக்காட்டில் வெந்து வடிகட்டிக்கொள்ளவும்.

வடிகட்டிய சாதத்தை வேக்க வைத்த கறிகலவையில் போட்டு பரத்தி மேலே லெமன் யெல்லோ கலர்,ரெட் கலர் ஆங்காங்கே கொஞ்சம் தூவவும்,மீதி இருக்கும் 50 மில்லி நெய்யை மேலே விட்டு அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி,பிரியாணி பாத்திரம் மூடியையும் மூடி சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும்.

பிரியாணி பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் இருந்தால் வைத்தால் நெருப்பு அதிகம் இல்லாமல் தேவையான அளவுக்கு கிடைக்கும்.

கால் மணி நேரம் கழித்து சிம்மில் உள்ள அடுப்பை அணைத்து விடவும்.

பின்பு திரும்பவும் கால் மணி நேரம் கழித்து திறந்து ஒரு போல் பிரட்டி பரிமாறவும். கமகமக்கும் நெல்லை தம் பிரியானி ரெடி.

குறிப்புகள்: