தம் சிக்கன் பிரியாணி

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - ஒரு கிலோ

பாசுமதி அரிசி - ஒரு கிலோ

வெங்காயம் - 350கிராம்

தக்காளி - 350 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பூண்டு - 75 கிராம்

பச்சைமிளகாய் - 8

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

புதினா, கொத்தமல்லி - தலா அரை கட்டு

எலுமிச்சை பழம் - ஒன்று

கேசரி பவுடர், உப்பு - தேவையான அளவு

தயிர் - அரை கப்

தாளிக்க :

எண்ணெய் - 200 மி.லி

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 4

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பட்டையை உடைத்து சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனித் தனியாக அரைத்த இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் தக்காளி சேர்த்து, சிறிது உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் 3 டம்ளர் வெந்நீர் ஊற்றி 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

பின்னர் அதில் சிக்கன் சேர்த்து கலந்து உப்பு, தேவையெனில் மிளகாய்த் தூள் சேர்த்து, பாதி எலுமிச்சை சாறை பிழிந்து தயிர் சேர்த்து கலந்து மூடி மிதமான தீயில் வேக விடவும். நடுவில் சிக்கனை அடிக்கடி கலந்து விடவும்.

இது தயாராகும் போதே மற்றொரு அடுப்பில், அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் புதினா, மீதி எலுமிச்சை சாறு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் சலசலவென்று கொதிக்கும் போது 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து விடவும்.

அரிசி போட்டு கொதி வந்து 5 நிமிடம் கழித்ததும் அரை வேக்காட்டில் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வடித்த சாதத்தை சிக்கனில் சேர்த்து ஒரு முறை மெல்லமாக கலக்கவும். அதன் பின்னர் கரண்டியின் பின் பாகத்தால் சிக்சாக்காக ( zigzag ) கலந்து விடவும்.

அந்த பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வடித்த கஞ்சி பாத்திரத்தை மேலே வைக்கவும். அடுப்பில் செய்வதாக இருந்தால் அடுப்பில் இருக்கும் தனலை எடுத்து தட்டில் போட்டு விடலாம்.

அரை மணிநேரம் தம்மில் விட்டு பின்னர் திறந்து சுற்றிலும் ஓரங்களை மட்டும் கரண்டியால் எடுத்து விடவும். கிளற கூடாது.

சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: