சிக்கன் பிரியாணி (18)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி (அல்லது) பொன்னி அரிசி - 2 கப்

சிக்கன் - 300 கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

பிரியாணிமசாலா - 2 ஸ்பூன்

சிக்கன்மசாலா - 2 ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன் (அல்லது) கேசரிகலர்

கொத்தமல்லிகீரை - 1/2 கட்டு

புதினா - 1/2 கட்டு

தண்ணீர் - 3 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 1 ஸ்பூன்

எண்ணை - 2 ஸ்பூன்

பிரியணி இலை - 1

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 2

அன்னாசிமொக்கு - 2

செய்முறை:

அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் பொடியாக நறுக்கவும்.மிளகாய் இரண்டாக கீறிவைக்கவும்.

கொத்தமல்லி,புதினாவை அலசி பொடியாக நறுக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய்,எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை போட்டு வெங்காயம்,மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

இஞ்சிபூண்டுவிழுது போட்டு நன்கு பச்சைவாசனை போக வதக்கி நறுக்கிய தக்காளி போடவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன் சிக்கனை போட்டு தண்ணீர்விடும்வரை நன்கு வதக்கவும்.

பிரியாணிமசாலா,சிக்கன்மசாலா,மஞ்சள்தூள் (அ) கேசரிகலர் சேர்த்து நன்கு கிளறி உப்பு, கொத்தமல்லி,புதினா சேர்த்து நன்கு எல்லாம் கலக்கும்படி கிளறவும்.

1டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவைத்து வெயிட்போட்டு 1 விசில்வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

சற்று ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து நன்கு கிளறிவிட்டு அரிசியை போடவும்.மீதம் உள்ள தண்ணிரை ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடி அடுப்பை ஆன்செய்து வெயிட் போட்டு வேகவிடவும்.

2 விசில் வந்தவுடன் 5நிமிடம் அடுப்பை சிம்மில்வைத்து இறக்கவும்.சிறிதுநேரம் கழித்து குக்கரை திறந்து நன்கு எல்லாம் சேரும்படி கலந்துவிட்டு வேரு ஒரு பாத்திரத்தில் மாற்றிவைக்கவும்.

சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: