சிக்கன் பிரியாணி (10)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ (4 டம்ளர்)

சிக்கன் - ஒரு கிலோ

தயிர் - ஒரு கப்

இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி

முந்திரி - 20

பச்சை மிளகாய் - 8

எலுமிச்சை - 2

தரமான மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

நாட்டு தக்காளி - 8

பெரிய வெங்காயம் - 4

புதினா - ஒரு கப்

கொத்தமல்லி - ஒரு கப்

பிரியாணி மசாலா பொடி - ஒரு பாக்கெட்

நெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினாவும், கொத்தமல்லியும் காம்புடன் சேர்த்து நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

அதில் வெங்காயம் மற்றும் உப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்

பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து சுருளும் வரை வதக்கவும் தக்காளி சேர்த்து உடைக்காமல் மெதுவாக கிளறவும். பின் மிளகாய் தூள், பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் தயிர், உப்பு சேர்த்து கிளறி பின்னர் சிக்கனை சேர்த்து மசாலா பிடிக்கும் வரை வைக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் கழுவி சுத்தம் செய்த அரிசியை சேர்க்கவும்.

நீர் வற்றும் சமயத்தில் எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு முறை கவனமாக அரிசி உடையாவண்ணம் கிளறி தம்மில் போடவும். தம்மில் போட பாத்திரத்தின் அடியில் உபயோகமற்ற பழைய தோசைக்கல்லையும் பாத்திரத்தினை மூடி அதன் மேல் கனமான பாத்திரத்தையும் வைத்து சிறுதீயில் 15 நிமிடம் வைக்கவும். சுவையான பிரியாணி தயார்.

குறிப்புகள்:

சிக்கன் வறுவல், வெங்காய ரைத்தா, தாளிச்சா, எள்ளுகத்தரிக்காய் கிரேவியுடன் பரிமாறலாம்.