சிக்கன் பிரியாணி (1)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
தயிர் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 200 கிராம்
கொத்தமல்லித் தழை - அரை கட்டு
புதினா தழை - அரை கட்டு
தனி மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
ஏலக்காய் - 5
பட்டை - 5
லவங்கம் - 5
எலுமிச்சை பழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பச்சை மிளகாய், பாதி அளவு புதினா மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் சுத்தம் செய்த சிக்கனைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி வேகவிடவும்.
மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் அரிசியைக் களைந்து போட்டு, அதனுடன் தயிர், மீதமுள்ள புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து, பாதி எலுமிச்சை பழச் சாறு பிழிந்துவிட்டு சிறிது உப்பு சேர்த்து, சரியாக 3 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
3 நிமிடங்கள் கழித்து அரிசிக் கலவையை, வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.
பிறகு கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றி, மீதமுள்ள எலுமிச்சை பழத்தை பிழிந்து, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார். அரை மணி நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு பரிமாறவும்.