கொண்டைக்கடலை பிரியாணி (1)
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக்கடலை - 1 கப்
2. வெங்காயம் - 2
3. தக்காளி - 3
4. பச்சை மிளகாய் - 5
5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
6. பட்டை, லவங்கம் - சிறிது
7. கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. தேங்காய் - 1/2 கப்
10. முந்திரி - 10
11. உப்பு
12. நெய் & எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
13. அரிசி - 1 1/2 கப்
செய்முறை:
அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை வெட்டி வைக்கவும்.
கடலையை ஊற வைத்து வேக வைக்கவும்.
தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், பட்டை, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மசாலா அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் + நெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் வேக வைத்த கொண்டை கடலை சேர்த்து கிளறி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் அரிசி சேர்த்து ஒரு கொதி வந்ததும் சிறுந்தீயில் மூடி வேக வைத்து எடுக்கவும்.