கேரளாவின் மலபார் பிரியாணி

on on on on off 5 - Great!
4 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

வெங்காயம் - 1/2 கிலோ

இஞ்சி - 50 கிராம்

நெய் - 5 தேக்கரண்டி

கறிவேப்பிலை தூள் - 3 தேக்கரண்டி

முந்திரி - 100 கிராம்

உலந்த திராட்சை - 100 கிராம்

பூண்டு - 50 கிராம்

பச்சை மிளகாய் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

தக்காளி - 300 கிராம்

கசகசா - 2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1/2 கப்

தயிர் - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

கரம் மசாலா தூள் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி

புதினா - ஒரு கைப்பிடி அளவு

கறிவேப்பிலை - 3 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

எண்ணைய் - தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்றாக கழுவி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

பச்சை மிளகாய் ,இஞ்சி,பூண்டை விழுதாக அரைக்கவும்.

தேங்காய் துருவலுடன் கசகசாவை சேர்த்து அரைக்கவும்.

தக்காளி,புதினா, கறிவேப்பிலையையும் நறுக்குங்கள்.

குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், முக்கால் பங்கு வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

அத்துடன் இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

கறிவேப்பிலைத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூளையும் போடவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கி மட்டனை சேர்க்கவும்.

அதன் பின் நன்றாக வதக்கி தயிரை ஊற்றி உப்பு போடவும்.

குக்கரை மூடி சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து திறந்து கசகசா, தேங்காய் கலவையை போடவும்.

அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் அரிசியைப் போட்டு லேசாக கிளறிய பின் உப்பு போட்டு 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கவும்.

மீதமுள்ள வெங்காயம், திராட்சையை நெய்யில் வதக்கவும். முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்த சோறை சிறிதளவு கொட்டி அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, புதினா, வதக்கிய வெங்காயம், முந்திரி, திராட்சையை பரவலாகக் கொட்டவும். எலுமிச்சை சாறை விடவும்.

இறைச்சியை பரவலாக அடுக்கவும். இதைப்போல ஒன்றன்மீது ஒன்றாக 3 அடுக்குகளாக அடுக்கவும்.

பிறகு அதை 'தம்' கட்டி 10 நிமிடம் வைக்கவும். சூடான மலபார் பிரியணி ரெடி.

குறிப்புகள்:

பிரியாணியின் சைடுக்கு தயிர் வெங்காயம் வைத்துக் கொள்ளவும்.