கலர்புல் பிரியாணி சோறு

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் - அரை கிலோ

பெரிய காரட் - ஒன்று

பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை பட்டாணி - 100 கிராம்

சிறிய இறால் - 200 கிராம்

மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

கயூ - 5

பிளம்ஸ் - 5

பட்டர் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

மல்லி இலை - ஒரு கைப்பிடி

செய்முறை:

பாஸ்மதி அரிசியை கழுவி 1/4 தேக்கரண்டி மஞ்சள், சிறிது உப்பு போட்டு அவிய வைக்கவும்.

உதிர், உதிர் சாதமாக வடித்து எடுத்து, சூடு ஆற முன் ஏலக்காய் பொடி போட்டு கிளறி விடவும்.

பின்பு சாதத்தை சூடு ஆறாமல் மூடி வைக்கவும்.

காரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பவற்றை சிறிய சதுரம், சதுரமாக வெட்டி வேறு வேறாக சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

இறாலை சுத்தம் செய்து கால் தேக்கரண்டி மஞ்சள், உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.

கயூவை சிறு சிறு துண்டங்களாக உடைத்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சூடாகியதும் முதலில் இறாலை பொரித்து எடுக்கவும்.

பின்பு அதே வாணலியில் காரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை பட்டணி என்பவற்றையும் பொரித்து எடுத்து வைக்கவும்.

கயூ, பிளம்ஸ் என்பவற்றையும் சிறிது நேரம் சூடான நெய்யில் போட்டு எடுக்கவும்.

அடுத்து சூடாக உள்ள சாதத்தினுள், பொரித்து வைத்த எல்லாவற்றையும் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: