உருளைக்கிழங்கு பிரியாணி
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி 1 கப்
உருளைக்கிழங்கு துண்டுகள்
தேங்காய்ப்பால் 1 கப்
பச்சை மிளகாய் 3
பட்டை 1
ஏலக்காய் 2
கிராம்பு 2
பிரிஞ்சி இலை 1
இஞ்சி 1 துண்டு
புதினா இலை சிறிது
முந்திரி 5
நெய் இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய்,கிராம்பு,பட்டை போட்டு வறுத்து,பிரிஞ்சி இலை, உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
வதங்கியதும் பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய்ப்பால்,உப்பு சேர்க்கவும்.
கடாயில் நெய் ஊற்றி,முந்திரி துண்டுகள் போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
அரிசியை போட்டு வறுத்து,குக்கரில் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையில் கொட்டி கலக்கவும்.
குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
புதினா,முந்திரி தூவி அலங்கரிக்கவும்.