இறால் பிரியாணி (2)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி - 3/4 கிலோ

இறால் - அரை கிலோ

வெங்காயம் பெரியது - 4

தக்காளி பெரியது - 3

பச்சை மிளகாய் - 3

மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

சீரக தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சோம்பு தூள் - அரை தேக்கரண்டி

பிரியாணி மசாலா - 1 1/2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி

பட்டை - 2

கிராம்பு - 6

ஏலக்காய் - 4

புதினா - 5 கொத்து

மல்லி கீரை - 5 கொத்து

எண்ணெய் - 50 மில்லி

தயிர் - அரை கப்

முந்திரி - 10

மஞ்சள் கலர், சிகப்பு கலர் - தலா ஒரு சிட்டிகை

நெய் - 2 தேக்கரண்டி

பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசியை கழுவி விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பட்டை, 4 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பிரியாணி மசாலா, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் இறால் போட்டு நன்கு கிளறி விடவும்.

அதனுடன் எல்லா மசாலாதூள் வகைகள், தயிர், தக்காளிசாஸ், உப்பு, பன்னீர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு பரப்பி விடவும். முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடவும். மல்லி தழை போடவும். மஞ்சள், சிகப்பு கலர், இரண்டையும் தனித்தனியே இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அதில் ஊற்றவும்.

தட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து 5 நிமிடம் தம்மில் வைக்கவும். பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு திரும்பவும் 15 நிமிடம் தம்மில் வைக்கவும்.

சுவையான இறால் பிரியாணி தயார்.

குறிப்புகள்: