வேர்க்கடலை குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 1/4 கப்
புளி - கோலி அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
அரைத்த தேங்காய் விழுது - ஒரு கரண்டி
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
தாளிக்க:
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - சிறிது
ஆல் பர்பஸ் பொடிக்கு:
கடுகு - 25
கிராம் வெந்தயம் - 25
கிராம் சீரகம் - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
வெள்ளை எள் - 50 கிராம்
மிளகு தூள் - 50 கிராம்
கறிவேப்பிலை - 4 கொத்து
(காய்ந்தது) தனியா - 50 கிராம்
பெருங்காயம் - 15 கிராம்
செய்முறை:
புளியைக் கரைத்து அதனுடன் வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளிதம், கொத்தமல்லித் தழை, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
ஆல் பர்பஸ் பொடி:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கல் தூசி பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் வெறும் வாணலியில் போட்டு தீயை மிதமாக வைத்து வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் பெருங்காயம் சேர்த்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்.
குறிப்புகள்:
ஆல் பர்பஸ் பொடியை குழம்பு, கூட்டு, கலந்த சாதம், சாம்பார் ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்தலாம் வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
சுட்ட அப்பளம் இதற்கு சரியான ஜோடி. விருப்பட்டால் கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய், பூசணி சேர்த்தும் செய்யலாம்.