வேப்பம்பூக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 100 கிராம்

மிளகாய் தூள் - 50 கிராம்

புளி - 100 கிராம்

பூண்டு - 100 கிராம்

நன்கு முற்றிய ஒட்டு மாங்காய் - 1

நல்லெண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

5 நிமிடங்கள் கழித்து புளியை கரைத்து நன்கு வடிகட்டி, கரைசலில் மிளகாய் தூள் போட்டு கரைத்து விட்டு உப்பு போட்டு குழப்பை தயாரிக்க வேண்டும்.

பின்பு அடுப்பை பற்ற வைத்து குழம்பு வைக்கும் பாத்திரத்தை வைத்து சட்டி காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்து வைத்திருந்த பூண்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின்பு சுத்தம் செய்து வைத்திருந்த வேப்பம் பூவை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பூண்டும் வேம்பம்பூவும் சிவக்க வதக்கவும். பின்பு குழம்பை ஊற்றி மூடி வைக்கவும்.

குழம்பு நன்றாக கொதித்து வந்ததும், துண்டாக அரிந்து வைத்துள்ள மாங்காயை போட்டு வேக விடவும்.

மாங்காய் வெந்து குழம்பு கெட்டியாக ஆன பிறகு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: