வெந்தய குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
புளி - நெல்லிகாய் அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
மிளாகாய் வற்றல் - 4
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
தண்ணிர் - 2 கப்
நல்லெண்னெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை:
தண்ணிரில் புளியை நன்றாக கெட்டியாக கரைத்து வைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்ததும் அதில் இந்த புளிகரைசலை
விட்டு நன்றாக சுண்ட கொதிக்க வைக்கவும்.
குழம்பு பாதியளவு வந்தவுடன் இறக்கி வைத்து மேலே
கொஞ்சம் பச்சை கறிவேப்பிலை போடவும்.
நல்ல எண்ணெய் மணத்துடன் சாதத்தோடவும், அரிசி உப்புமா
பொங்கல் போன்றவையுடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.
இத்துடன் சுட்ட அப்பளம் நல்ல காம்பினேஷன்.