வெந்தயக் குழம்பு மற்றொரு முறை
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 25 கிராம்
தேங்காய் - 1
மிளகாய் வற்றல் - 6
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புளி - தேவையான அளவு
எண்ணெய் - 25 மில்லி
உப்பு - தேவையானவை
செய்முறை:
தேங்காயைத் துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். அரைமணி முன்பாக வெந்தயத்தைக் கழுவி ஊற வைக்கவும்.
வெங்காயம், மிளகாய் வற்றலை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். கொத்தமல்லியைக் கழுவி நறுக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானவுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் கொத்தமல்லியைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். வெங்காயம், மிளகாய் வற்றல் மசியலைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அரை கப் புளி தண்ணீர் சேர்க்கவும். தேவை எனில் மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும்.
சிறிது கெட்டியானவுடன் இரண்டாம் பாலை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதிக்க கெட்டியானவுடன் இறக்கும் முன்பு. முதல் பாலை ஊற்றி உப்பு சேர்த்து இறக்கி பரிமாறவும்.