வெந்தயகுழம்பு
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 80 கிராம்
புளி - 40 கிராம்
கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 5
சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பருப்பு,வெந்தயம் இரண்டையும் சேர்த்து 400 மில்லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து தனியாக வைக்கவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு 125 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து சக்கையை நீக்கிவிட்டு கரைத்த புளிகரைசலில் சாம்பார் பொடியை போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் புளி சாற்றை ஊற்றி கொதிக்கவிடவும்.
பின் பருப்பு, வெந்தயத்தை போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.
கொதித்த உடன் இறக்கி, வேறு ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெந்த கலவையில் கொட்டி பரிமாறவும்.