வெண்டைக்காய் புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

புளி - சின்ன எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தேங்காய் - 2 சில்

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை 2 அங்குலம் நீளத்திற்கு நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு வெண்டைக்காயை பிசுப்பிசுப்பு போகும் வரை வதக்கவும்.

மீதி எண்ணெய்யை வேறு கடாயில் விட்டு தாளிக்கவுள்ளவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி புளியை கரைத்து ஊற்றவும்.

நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கியவுடன் வெண்டைக்காயை போட்டு மூடவும்.

குறிப்புகள்: