வெங்காய வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பூண்டு - ஒன்று அல்லது 20 பல்
புளி - எலுமிச்சைபழம் அளவு
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
செய்முறை:
பூண்டை தோல் எடுத்து வைக்கவும். வெங்காயத்தையும் தோல் எடுத்து பொடியாக நறுக்கவும்
புளியை கரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் கரைத்து வைத்த புளியை ஊற்றவும்.
புளி, பொடி வாசனை போனதும் வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
அப்பளம் வடகம் நல்ல காம்பினேஷன்.