வெங்காய வத்தக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

பூண்டு - 1 (சுமார் 20 பல்)

புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு

சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெல்லம் - ஒரு சிறு துண்டு

உப்பு - தேவையான அள்வு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

நல்லெண்ணை - 2 குழி கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்று ஒன்றாக போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின் புளியை கரைத்து ஊற்றவும்.

புளி, பொடி வாசனை போனதும் வெல்லம் சேர்த்து எண்ணை பிரியும் வரை கொதிக்க விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: