வெங்காய குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1/4 கிலோ (சிறியது)
பூண்டு - 10 பல்
புளி- ஒரு எழுமிச்சை அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள்- சிறிது
மசாலா தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பூண்டை தேல் எடுத்து வைக்கவும்.
புளியை கரைத்துவைக்கவும்.
பின் அடுப்பில் அடிகனமான சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மசாலா தூள் போட்டு கொதித்ததும் மிதமான தீயில்வைத்து எண்ணெய் மிதந்து குழம்பு கெட்டியான பின்பு இறக்கி பரிமாறவும்.