வெங்காயத் தாள் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மொட்டான வெங்காயத் தாள் - 1 கட்டு

சிறிய வெங்காயம் - 10

துவரம் பருப்பு - 3/4 கப்

புளி - எலுமிச்சை அளவு

தேங்காய்த் துருவல் - 1 1/2 தேக்கரண்டி

சோள மாவு ( அல்லது ) அரிசி மாவு - 1 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளியை கெட்டியாக 1/4 கப் அளவிற்கு கரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத் தாளை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.

புளி கரைசலுடன் சின்ன வெங்காயம், நறுக்கிய வெங்காயத் தாள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.

அது வெந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கவும்.

அரிசி மாவை கரைத்து அதனுடன் கலக்கவும்.

இப்பொது தேங்காய்த் துருவலையும் குழம்பில் சேர்க்கவும்.

கடுகு தாளித்து கொட்டி குழம்பை இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெங்காயத் தாள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டையும் தணிக்கும்.