வெங்காயக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் - 1/2 கப்

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 15 இலைகள்

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 4 பல்

தக்காளி - 1

புளிக்கரைசல் - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இந்த வெங்காயக் குழம்பு செய்வதற்கு கொஞ்சம் அதிகமாக எண்ணெய் எடுத்தால் சுவையாக இருக்கும். 4 அல்லது 5 தேக்கரண்டி எண்ணெய் இருந்தால் நல்லது.

எண்ணெயை காயவைத்து வரிசையாக கொடுத்துள்ளவற்றை கொண்டு தாளிக்கவும்.

பின் வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து நன்கு பொன்னிறத்துக்கு வரும் வரை வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசிந்து வெங்காயத்துடன் கலந்து மை போல ஆகும் வரை வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்களை சேர்த்து மேலும் வதக்கி புளிக் கரைசல், உப்பும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து மேலும் ஒரு 15 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

ரெடிமேட் தேங்காய்பால் பவுடர் 3 தேக்கரண்டி, 1/2 கப் தண்ணீரில் கரைத்து தேங்காய்ப்பாலுக்கு பதில் ஊற்றினாலும் சுவை தான்.