வாழைப்பூ குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

வெங்காயம் - 2

தக்காளி - 1

முருங்கைக்காய் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

தனியா தூள் - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 இலை

கொத்தமல்லி - கால் கப்

பூண்டு - 10 பல்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் மற்றும் வாழைப்பூவை அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை போட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு, பூண்டு சிவக்கும் வரை வறுக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கிவிட்டு, அதனுடன் வாழைப்பூ சேர்க்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் அனைத்து தூள்களையும் சேர்த்து வதக்கி புளிக்கரைச்சலை ஊற்றவும்.

பிறகு முருங்கைக்காய் போட்டு, நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். காய்கள் வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: