வாழைப்பூ குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

சின்ன வெங்காயம் - 5

காய்ந்த மிளகாய் - 5

புளி - 1 எழுமிச்சம் பழ அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை நரம்பு, கண்ணாடி நீக்கி பொடியாக நறுக்கவும்.

புளியை 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தை நன்கு நசுக்கி வைக்கவும்.

புளி தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் சேர்த்து பரிமாறவும.

குறிப்புகள்: