வாழைத்தண்டு புளிக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - அரை அடி நீளதுண்டு

புளி - சிறு நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 2

மிளகு - 3 அல்லது 4

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

வாழைத்தண்டை நார் நீக்கி மெல்லிய அரைவட்ட துண்டுகளாக்கவும். வாழைத்தண்டு தடிமனாக இருந்தால் ஒரு வட்ட துண்டை நான்காக வெட்டவும்.

வெட்டிய வாழைத்தண்டுடன் உப்பு, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து வேக விடவும். புளியை கரைத்து வைக்கவும்.

அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.

வாழைத்தண்டு பாதியளவு வெந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

நன்றாக வெந்ததும் அரைத்த கலவை சேர்த்து,தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து பச்சை வாசனை போனதும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து குழம்பில் கொட்டி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். பழைய சாதத்தோடு சூப்பர் காம்பினேஷன்.