வாழைத்தண்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - 1/2 அடி நீள துண்டு

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் துருவல் - 1/4 மூடி

காய்ந்த மிளகாய் - 8

தனியா - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைத்தண்டை தோல் சீவி, நாறெடுத்து, வட்ட வட்டமாக நறுக்கவும். (மெல்லியதாக).

புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், துவரம்பருப்பு,கடலை பருப்பு, தனியா, 5 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஆறிய பின், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு வில்லைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

வதங்கிய பின், அரைத்த மசாலா, கரைத்த புளி ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வேக விடவும்.

தண்டு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: