வாழைக்காய் புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 1

பெரிய வெங்காயம் – 1

மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி

மல்லிப்பொடி – 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி

புளி – ஒரு நடுத்தர எலுமிச்சையளவு

சோம்பு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 3 கொத்து

பூண்டு – 2 பல்

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை நானூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். வாழைக்காயில் அடியையும் நுனியையும் லேசாக நறுக்கி விட்டு நீளத்தில் நான்காக பிளந்து அரை அங்குல கனமான துண்டுகளாக குறுக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். (தோல் நீக்க வேண்டாம்)

சின்ன வெங்காயத்தை தோலுரித்து குறுக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி விழுதாக அரைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து மஞ்சள் பொடி,மல்லிப்பொடி, மிளகாய்பொடி சேர்த்து வதக்கவும்.

பொடிகளின் பச்சை வாசனை போனதும் உப்பு, அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடம் கழித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டு மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பூண்டு தட்டிப் போடவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: