வாழைக்காய் குழம்பு (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1/2

வெங்காயம் - 1

தக்காளி - 2

பூண்டு - 2 அல்லது 3 பற்கள்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி, நான்காக நறுக்கி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பூண்டு போட்டு வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் வாழைக்காய் துண்டுகள் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.

வாழைக்காய் வெந்து, குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இரண்டு தக்காளி சேர்த்திருப்பதால், அதன் புளிப்பே போதுமானதாக இருக்கும். பொதுவாக இந்த குழம்புக்கு புளி சேர்ப்பதில்லை.

இது சாதத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.