வத்த குழம்பு பேஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

புளி - ஒரு நடுத்தர எலுமிச்சை அளவு

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - மூன்று கொத்து

பூண்டு - 10 பல்

கடுகு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

எண்ணை - 5 டேபிள் ஸ்பூன்

உப்பு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக வடிகட்டவும்.

பூண்டு சின்ன வெங்காயத்தை தோலுரித்து குறுக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் பூண்டு, தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

பின் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து பேஸ்ட் போல் கெட்டியானதும் இறக்கவும். இதனை டப்பாவில் அடைத்து 10 நாட்கள் வைக்கலாம்.

குறிப்புகள்: