வத்தக்குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 15 பல்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சுண்டைக்காய் வற்றல் - சிறிதளவு
கருப்பு வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்கவும்:
மிளகாய் வற்றல் - 12
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு வறுத்து சிறிது பூண்டு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டைக்காய் வற்றல் போட்டு வதக்கவும்.
பொன்நிறமானவுடன் புளிக்கரைச்சல், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சிறிது கெட்டியான பின் கருப்பு வெல்லம், நல்லெண்ணெய் சேர்க்கவும்.
நன்கு கெட்டியான பின் இறக்கி பரிமாறவும்.