வடை குழம்பு





தேவையான பொருட்கள்:
மசால் வடை (பருப்பு வடை) - 4
தக்காளி - 2
வெங்காயம் - 3
தேங்காய் - 1 சில்லு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தனியா பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணை - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வடைகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
வெங்காயம், தக்காளி தேங்காய் சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி கரைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி,தனியா பொடி, மிளகாய் பொடி, சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து கரைத்து கொள்ளவும்
பிறகு அதை அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்
பிறகு வடைகளை போட்டு மேலும் 10 நிமிடம் அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்