வடைகறி குழம்பு
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 300 கிராம்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
சோம்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி
குழம்பு தயாரிக்க:
வெங்காயம் - 2
தக்காளி - 4
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 1
கறிவேப்பிலை - தாளிக்க
கடலை மாவு - 3 பெரிய கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது குழம்பு தயாரிக்க, முதலில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் தக்காளியில் மஞ்சள், மிளகாய்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் பொடியாக நறுக்கிய பூண்டு எல்லாம் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் பாதி தக்காளியை ஊற்றிக் கிளறவும். பின்னர் அதிலேயே மீதமுள்ள தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள வடைகளைப் போட்டு ஊறிய பிறகு பரிமாறவும்.