மோர் குழம்பு (7)





தேவையான பொருட்கள்:
கெட்டி மோர் - 3 கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயம் - சிறிது
அரிசி - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
இஞ்சி - சிறு வில்லை
கறிவேப்பிலை - 4 இலை
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், பெருங்காயம், அரிசி, துருவிய தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சிறிது மோர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை கெட்டி மோரில் விட்டு சூடாக்கவும், உப்பு சேர்க்கவும்.
இறுதியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
குழம்பில் குணுக்கு, பூசணிக்காய், வறுத்த வெண்டைக்காய் இவைகளை போடலாம்.