மோர் குழம்பு (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மோர் - 1/2 லிட்டர்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1/4 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - ஒரு கை பிடி

மல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

பருப்பு வகையை சிறிது நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின்பு அத்துடன் மிளகாய், சீரகம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அரைத்தவற்றை மோர், உப்புடன் கலந்து கொதிக்க வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். அடுப்பில் கொதித்து கொண்டு இருக்கும் போது கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின்பு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும், மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: