மோர் குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

வெள்ளை பூசணிக்காய் - 1/2 கப் (சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்)

உப்பு - தேவையானளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

மிளகாய் வத்தல் - 2

பெரிய வெங்காயம் - 1

அரைக்க:

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பச்சரிசி - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். (பருப்பு ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்ற வேண்டாம்). பூசணிக்காயை வேக வைத்து தண்ணீரோடு எடுத்து வைத்து கொள்ளவும்.

தயிரில் பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து பீட்டரால் நன்கு அடிக்கவும்.

இதில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், பருப்பு ஊற வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு வேக வைத்த பூசணிக்காய் தேவையானளவு உப்பு சேர்த்து கிளறவும்.

அடுப்பில் வைத்து கொதிக்காமல் நுரை வரும் போதே இறக்கி விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். பிறகு குழம்பில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: