மோர் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

துவரம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

பச்சரிசி - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி (தனியா) - 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5 (அல்லது) காரத்திற்கேற்ப

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

மிளகு, சீரகம் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

செய்முறை:

துவரம் பருப்புடன் அரிசி மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறியதும் அவற்றுடன் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தயிரைக் கட்டிகளில்லாமல் கரைத்து, அதில் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அத்துடன் கரைத்து வைத்திருக்கும் மோர் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

விருப்பப்பட்டால் வெண்டைக்காய், பூசணிக்காய் சேர்த்தும் செய்யலாம்.