மோர் குழம்பு (கடலை மாவுடன்)





தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - 1/4 கட்டு
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
கடலை மாவினை சிறிது தயிர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு இந்த கலவையில் அனைத்து தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து பின் சீரகம் சேர்க்கவும்.
அதன் பின் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவு தயிர் கலவையினை இதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் வைத்து சுமார் 20 நிமிடம் வைக்கவும்.
கடைசியில் இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி சேர்த்து மேலும் 5 நிமிடம் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.