மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
மோர் - 1/2 லிட்டர்
பூசணிக்காய் - ஒரு கீற்று
சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு சில்
இஞ்சி - அரை அங்குலம்
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்களை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சேனைக்கிழங்கை நறுக்கி உப்பு போட்டு வேகவிடவும்.
தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைக்கவும். பருப்புகள், அரிசி ஆகியவற்றை அரைக்கவும். மோரைக் கடைந்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சின்ன தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை வதக்கவும்.
பிறகு மசாலா, பருப்புக்கலவை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மோரை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.