மோர்குழம்பு
தேவையான பொருட்கள்:
ஆமை வடை (சிறிதாக தட்டிய மசால் வடை) - 10 அல்லது 15
புளித்த தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி (1/2 மணி நேரம் ஊற வைத்தது)
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மசால் வடைகளை சுட்டு தயாராக வைத்துக் கொள்ளவும். புளித்த தயிரை நீர் சேர்த்து மிக்சியில் அடித்து மோராக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்த பின் அடித்து வைத்திருக்கும் மோரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் வடைகளை சேர்த்து, அடுப்பை நிறுத்தி விடவும்.
வடைகள் 1/2 மணி நேரத்துக்குள் குழம்பில் ஊறி விட்டு பிறகு பரிமாறவும்.
குறிப்புகள்:
வேண்டுமானால் வடைக்கு அரைக்கும் போது, கடலை பருப்புடன், ஒரு பிடி உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைக்கலாம்.