மொச்சை புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சைமொச்சை - 300 கிராம்
மிளகாய் தூள் - 1 தேக்கராண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சைஅளவு
மல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சிறிய தேங்காய் துண்டு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 & 7 பல்
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
செய்முறை:
மொச்சையை கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளைப் போட்டு தாளித்து அத்துடன் மிளகாய் தூள் மற்றும் அரைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும்
வதங்கியதும் மொச்சையை போட்டு வதக்கவும்.
புளியை கரைத்து அதில் தனியாதூள், சீரகத்தூள், உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதை வதக்கிய மொச்சையில் ஊற்றி குக்கரில், 5 நிமிடத்துக்கு வேகவிடவும். வெந்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும்.