மொச்சை குழம்பு
தேவையான பொருட்கள்:
மொச்சை கொட்டை - 2 அல்லது 3 கைப்பிடி
நடுத்தர அளவு உருளை கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2 (நடுத்தர அளவு)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு பத்தை
சோம்பு - சிறிதளவு
புளி - கொட்டைபாக்கு அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மொச்சை கொட்டையை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர், அதன் தோலை பிதுக்கி எடுத்தால் பிதுக்கு பருப்பு தயார்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்தவுடன் பிதுக்கி வைத்துள்ள மொச்சையை சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பிதுக்கு பருப்பு வெந்ததும், வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். சிறிது நேரம் கொதித்தவுடன், உருளை கிழங்கில் உப்பு, காரம் இறங்கி இருக்கும்.
இதனுடன் தேங்காய் மற்றும் சோம்பு அரைத்த அந்த விழுதினை சேர்க்கவும்.
தக்காளியின் புளிப்பு போதவில்லை யென்றால், கொட்டை பாக்கு அளவு புளியை கரைத்து ஊற்றவும். மேலே சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.