மொச்சைக்கொட்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
காய்ந்த (சிவப்பு) மொச்சைக்கொட்டை - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மொச்சையை லேசாக வறுத்து வேகவைத்து எடுக்கவும். புளிக்கரைசலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நல்ல வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பிறகு புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் வேகவைத்த மொச்சையை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்து மிளகாய் தூள் வாசம் அடங்கியதும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.