மொச்சைகொட்டை புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மொச்சைகொட்டை - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

புளி - பெரிய எலுமிச்சை அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தியம்- 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணை - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொச்சையை 1 ஸ்பூன் எண்ணை விட்டு வறுக்கவும். வாசனை வந்ததும் குக்கரில் போட்டு 3 விசில் விடவும்

கடாயில் எண்ணை விட்டு கடுகு,வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து சாம்பார் பொடி,மஞ்சள் பொடி,உப்பு கரைத்த புளி சேர்த்து கொதிக்க வைக்கவும்

பச்சை வாசனை போனதும் வேக வைத்த மொச்சைகொட்டையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். மீதியுள்ள நல்லெண்ணை, சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்:

கம்பு சாதத்திற்க்கான சுவையான காம்பினேஷன் ரெடி.