முள்ளங்கி தேங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
அரை வட்டமாக நறுக்கிய முள்ளங்கி - 1 கோப்பை
வெங்காயம் - 1 (சிறியது)
தக்காளி - 1
புளி - ஒரு கோலிகுண்டு அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 3/4 கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
மிளகு - 3 எண்ணம்
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் அளவு சூடான தண்ணீரில் புளியை ஊற வைக்கவும்.
மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கிவிட்டு முள்ளங்கியைச் சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி வதங்கியதும் 3 மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து ஊற்றவும்.
முள்ளங்கி வெந்து கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டுக் கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.